கெல்கலாண்டில் யுத்த வீரர்கள் - நாடகம் இந்த நாடகத்தை notionpress.com வெளியிட்டுள்ளது. இதன் ஆசிரியர் ஹென்ரிக் இப்சன், தமிழாக்கம் இ. தியாகலிங்கம். 'கெல்கலாண்டில் யுத்த வீரர்கள் என்ற இந்த நாடகம் ஹென்ரிக் இப்சனால் 1858 இல் எழுதப்பட்டுக் கிட்டத்தட்ட 200 வருடங்கள் சென்றுவிட்டன. இருந்தும் அதன் வீரியம் குன்றாது இருப்பது அதிசயமூட்டுகிறது. துருவத்தின் பாரதம் இந்த நாடகத்தில் கொப்பளிக்கிறது.' என்று இதைத் தமிழாக்கம் செய்தவரான எழுத்தாளர் இ. தியாகலிங்கம் குறிப்பிட்டுள்ளார். அது ஏற்றுக்கொள்ளக்கூடிய கணிப்பே. இவரது படைப்புகளைப் பற்றித் தெரிந்து கொள்ள வேண்டும் என்றால் முதலில் அவரைப் பற்றித் தெரிந்து கொள்ள வேண்டும். என்ரிக் இப்சன் (மார்ச் 20, 1828 - மே 23, 1906) நவீன நாடக இலக்கியத்தின் தந்தை என்று போற்றப்படுபவர். நோர்வேயைச் சேர்ந்த இவர் நாடகாசிரியரும், கவிஞரும் ஆவார். ஐரோப்பிய நாடகங்கள் மறுமலர்ச்சி பெற உதவியவர். 1879 ஆம் ஆண்டில் ஒரு பொம்மைவீடு என்ற நாடகத்தின் மூலம் இப்சன் தனது முக்கிய சர்வதேச கவனத்தைப் பெற்றார், மேலும் அவர் முக்கிய நோர்வே எழுத்தாளராகவும் இலக்கியத்திற்கான உலகளாவிய பெய...